Arrow
Arrow
PlayPause
Slider

கியூபெக் தமிழ்ச் சங்கம் உங்களுடன்

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். புலம் பெயர்ந்தோம், வாழ்ந்தோம் என்று வரலாற்றில் அழிந்து போகாமல், தமிழையும் தாய் நிலத்தையும் காப்போம் என உறுதி பூண்டு,தாய் நிலத்திலிருந்து பிடுங்கி எடுத்த நாற்றுக்கள் களை இழந்து போகாமல் நட்ட இடமெல்லாம் தாய் மொழி வளர்த்து புலத்திலே சிறந்து விளங்கும் பல சங்கங்கள் மத்தியில் கியூபெக் மாநிலத்தில் நாமும் ஒருவராய் நன்றியுடன் நிற்கின்றோம்.

இந்த வளர்ச்சியின் பின்னால் பலரது உழைப்புக்கள்,தன்னலமற்ற சேவைகள் , தாய்மண் மீதும் எம் உயிர்த்தமிழ் மீதும் கொண்ட பற்றே காரணம். இத்தகைய பண்புகளால் எமது சங்கம் மேலும் மேலும் வளருமென்பது திண்ணம். இனிவரும் சந்ததிக்கும் நாம் விட்டுச்செல்ல எமது மொழியும், மொழியுனூடாக எமது பண்பாடுமே எம்மிடமுள்ளது, அதை மனதில் நிறுத்தி என்றென்றும் உழைப்போம். தாய் மொழி வாழத் தோள்கொடுப்போம் தமிழராய் இணைவோம்.

எமது சேவைகள்

இதன் அடிப்படையில்தான் 30-01-2010 அன்று கியூபெக் அறிவுச்சோலைக் தமிழ்க் கல்வி நிலையம் என்னும் பெயரில் கனேடியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகப் பதிவு செய்து எமது சேவையைத் தொடங்கியிருந்தோம். தொடர்ந்து எமது சேவைகளைப் விரிவுபடுத்தும் நோக்கில் ”கியூபெக் தமிழ்ச் சங்கம் ” என்னும் பெயர் மாற்றப்பட்டு தற்போது சோலை ஒன்று தொடக்கம் சோலை ஆறுவரை ஆறு பாடசாலைகளை கியூபெக் மாநிலத்தில் ஆறு இடங்களில் நிறுவி தொண்டாற்றி வருகின்றோம்.